இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அனுமதிக்கப்பட்டது ஏன்? - சரத் பவார்

Published On 2025-05-13 00:07 IST   |   Update On 2025-05-13 00:07:00 IST
  • பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே கையெழுத்தானது.
  • ஒரு அமெரிக்கத் தலைவர் பகிரங்கமாக முன்வந்து இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி(எஸ்.பி.) தலைவர் சரத் பவார் சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.

அவர் கூறியதாவது, சிம்லா ஒப்பந்தம் (1972 இந்தோ - பாக் போர் நிறுத்த ஒப்பந்தம்) அப்போதைய பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் மூன்றாம் தரப்பு தலையீட்டை தெளிவாக நிராகரித்தது. ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இல்லாமல் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.

பிறகு ஏன் மற்றவர்கள் தலையிட வேண்டும்?. இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஏன் அனுமதிக்கப்பட்டது? இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.  ஒரு அமெரிக்கத் தலைவர் பகிரங்கமாக முன்வந்து இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. இது சரியான அணுகுமுறை அல்ல" என்று தெரிவித்தார்.

மேலும் ராணுவ தாக்குதல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அனைத்து தகவல்களையும் ஊடகங்களில் வெளியிட முடியாது. சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை விட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவது சிறந்தது என்பதே என் கருத்து" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News