இந்தியா

பீகார் தேர்தலிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது - சித்தராமையா சொல்கிறார்

Published On 2025-11-14 18:43 IST   |   Update On 2025-11-14 18:43:00 IST
  • பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
  • ஏன் என்டிஏ இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் வென்றது.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களின் ஆணையை நாம் ஏற்க வேண்டும். பின்னடைவுக்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை.

நான் பீகாருக்கு செல்லவில்லை. யார் வாக்களிக்கவில்லை, ஏன் என்டிஏ இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் வென்றது என்று எனக்குத் தெரியாது. நான் தெரிந்துகொள்ள முயற்சிப்பேன்" என்று தெரிவித்தார்.

பீகார் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி எழுப்பிய வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, சித்தராமையா, "அவர்கள் இங்கேயும் வாக்கு திருட்டு செய்திருக்கிறார்கள்" என்று பதிலளித்தார்.   

Tags:    

Similar News