இந்தியா

வந்தே பாரத் ரெயில் மோதி விபத்து- 4 பேர் உயிரிழப்பு

Published On 2025-10-03 20:47 IST   |   Update On 2025-10-03 20:47:00 IST
  • ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து.
  • இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம் பூர்ணியாவில் தண்டவாளத்தை கடக்கும்போது வந்தே பாரத் ரெயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் இருட்டாகவும், பனிமூட்டமாகவும் இருந்ததால் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்துள்ளது முதற்கு கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில், அதிகாலை 5 மணியளவில் பூர்னியா நகரத்தின் அருகே சென்று கொண்டு இருந்தபோது விபத்து நடந்துள்ளது.

மேலும், பொது மக்கள் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், நியமிக்கப்பட்ட கிராஸிங்கை பயன்படுத்தவும், தண்டவாளங்களில் நடப்பதைத் தவிர்க்கவும் என்ஆர்எப் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News