இந்தியா
null

UPI பணப் பரிவர்த்தனை சேவைகள் முடக்கம்.. Paytm, G Pay செயல்பாடுகளில் சிக்கல்!

Published On 2025-04-02 20:30 IST   |   Update On 2025-04-02 20:32:00 IST
  • Paytm, Google Pay மற்றும் PhonePe போன்ற UPI பயன்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டது.
  • நேற்று இதேபோன்று எஸ்பிஐ ஆன்லைன் பரிவர்தனைகளில் சிக்கல் ஏற்பட்டது

நாடு முழுவதும் பல பயனர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைக்கான UPI சேவை முடங்கியுள்ளது.

சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான Downdetector.in தரவுகளின்படி, இன்று பிற்பகல் முதல் இந்தியா முழுவதும் பல பயனர்களுக்கு UPI சேவை முடங்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Paytm, Google Pay மற்றும் PhonePe போன்ற UPI பயன்பாடுகளிலும், SBI போன்ற வங்கி பயன்பாடுகளிலும் உள்ள சேவைகள் UPI சேவையில் ஏற்பட்ட இடையூறுகளால் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

59% பயனர்கள் பண பரிமாற்றத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து புகாரளித்ததாக Downdetector.in தரவுகள் தெரிவிக்கின்றன. எக்ஸ் தளத்திலும் பலர் யுபிஐ பரிவர்த்தனை சிக்கல் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

நேற்று இதேபோன்று எஸ்பிஐ ஆன்லைன் பரிவர்தனைகளில் சிக்கல் ஏற்பட்டது. முன்னதாக கடந்த வாரத்திலும் யுபிஐ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News