இந்தியா
null

எங்கும், எதிலும்... UPI பணப் பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்

Published On 2025-09-10 12:24 IST   |   Update On 2025-09-10 12:32:00 IST
  • இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • இன்று துபாயில் நடைபெற்ற 28வது உலகளாவிய போஸ்டல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.

இந்தியாவில் கோடிக்கணக்கானோர் UPI பணபரிவர்த்தனைகளை தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தும் UPI பணபரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இன்று துபாயில் நடைபெற்ற 28வது உலகளாவிய போஸ்டல் காங்கிரஸ் மாநாட்டில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா UPI–UPU ஒருங்கிணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இதன்மூலம் 192 நாடுகளில் UPI பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ளமுடியும். விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News