அது அம்பானி ஸ்டைல், இது எங்க ஸ்டைல் - புல்டோசரில் மணமக்கள் ஊர்வலம் - வீடியோ வைரல்
- கூடுதல் இருக்கைகளை போட்டு குழந்தைகள், உறவினர்கள் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
- வலைத்தளவாசிகள் கலவையான கருத்துகளை பதிவிட்டு மணமக்களை வாழ்த்தி வருகிறார்கள்.
அம்பானி வீட்டு கல்யாணம் ஜெட் விமானம், தங்க உடை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஆடம்பரத்தின் உச்சமாக அரங்கேறி வருகிறது. அதே வேளையில், உத்தரபிரதேச மணமக்கள் புல்டோசரில் எளிமையாக ஊர்வலம் நடத்தி வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
கோரக்பூரை சேர்ந்த மணமகன், மணமகளையும், உறவினர்களையும் புல்டோசர் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். புல்டோசரின் மண் அள்ளும் எந்திர பாகத்தில் சில இருக்கைகளை போட்டு மணமக்கள் அமர்ந்து இருக்கிறார்கள். மேளதாள இசைக்கு மணமகன் அமர்ந்தபடியே உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார். சில நேரங்களில் அருகில் கூடுதல் இருக்கைகளை போட்டு குழந்தைகள், உறவினர்கள் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
இதுபற்றிய வீடியோவை பிரியா சிங் என்பவர் எக்ஸ் வலைத்தளத்தில் பகிர அது இணையதளத்தை கலக்கி வருகிறது. வலைத்தளவாசிகள் கலவையான கருத்துகளை பதிவிட்டு மணமக்களை வாழ்த்தி வருகிறார்கள்.