இந்தியா

இனிமேல் சட்டமன்றத்தில் சத்தமாக சிரிக்க முடியாது: உ.பி.யில் புதிய விதி அமலாகிறது

Published On 2023-08-09 04:15 GMT   |   Update On 2023-08-09 04:15 GMT
  • சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு
  • சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது

இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றமாக உத்தர பிரதேச மாநிலம் சட்டமன்றம் திகழ்கிறது. 403 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு, பேப்பர்களை கிழிப்பதற்கு, சத்தமாக சிரிப்பதற்கு விரைவில் தடைவர இருக்கிறது.

இதற்கான புதிய விதிமுறைகள் நேற்றுமுன்தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மீதான விவாதம் இன்று நடைபெற்று அதன்பின் நடைமுறைப்படுத்தப்படும்.

சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது. உரை நிகழ்த்தும்போது கேலரில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டக் கூடாது. அதேபோல் பாராட்டக்கூடாது.  புகைப்பிடிக்கக் கூடாது. சத்தமாக சிரிக்கக் கூடாது.

சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு. உறுப்பினர்கள் எந்தவிதமான குறிப்புகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. சட்டமன்ற முதன்மை செயலகம் அன்றைய தினத்திற்குரிய பணிக்குறிப்புகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற செய்யும் போன்ற விதிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.

Tags:    

Similar News