நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய பேருந்து... 5 பேர் பலி
- போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஜட்டாரி மற்றும் தப்பல் டவுன்ஷிப் இடையே செவ்வாய்கிழமை இரவு விபத்து நடந்துள்ளது.
அலிகார்:
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்த தனியார் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார்கள், டெம்போக்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட12 வாகனங்கள் மீது மோதியது. போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும், 6 பேர் காயமடைந்தனர். ஜட்டாரி மற்றும் தப்பல் டவுன்ஷிப் இடையே செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் என்றும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். பேருந்து ஓட்டுனர் போதையில் இருந்திருக்கலாம் என விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறி உள்ளார்.