இந்தியா

"ஆப்ரேஷன் அஜய்" திட்டத்தின் மூலம் இதுவரை 1200 பேர் இந்தியா வருகை- மத்திய அமைச்சகம்

Published On 2023-10-19 18:02 IST   |   Update On 2023-10-19 18:02:00 IST
  • பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பதில் சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
  • பொதுமக்கள் உயிர் இழப்பு மற்றும் மனிதாபிமான சூழல் குறித்து இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 1200 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெிரவித்துள்ளார்.

மேலும் அவர், " இஸ்ரேலில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாம் கண்டித்துள்ளோம். ஹமாஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் உயிரிழந்ததாக இதுவரை எந்த தகவல்களும் இல்லை.

பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பதில் சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

பொதுமக்கள் உயிர் இழப்பு மற்றும் மனிதாபிமான சூழல் குறித்து இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News