இந்தியா

(கோப்பு படம்)

பெண்கள் கண்ணியத்துடன் பணியாற்ற மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது- மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

Published On 2022-09-05 21:45 GMT   |   Update On 2022-09-05 21:45 GMT
  • மத்திய அரசு பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை.
  • சுயசார்பு தொழில் முனைவோராக பெண்கள மாறுவதற்கு வாய்ப்பு.

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:

கடந்த 8 வருடங்களில் பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட நிர்வாக சீர்திருத்தம் மூலம் பெண்களின் பணிச்சூழலை எளிதாக்கியுள்ளது. பெண்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் பணியாற்றுவதற்கான பெரிய சமூக சீர்திருத்தம், மேற்கொள்ளப்பட்டுள்ளது.   


மத்திய அரசு பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எனது அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய வேலை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்புடனும் அவர்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு வாய்ப்பளிக்கப் படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News