இந்தியா

அயோத்தி ராமர் கோவிலில் 2 பக்தர்கள் உயிரிழப்பு- கூட்ட நெரிசல் காரணமா?

Published On 2025-01-28 08:05 IST   |   Update On 2025-01-28 08:05:00 IST
  • குழந்தை ராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
  • கூட்ட நெரிசல் காரணமாவே இருவரும் இறந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

அயோத்தி:

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அங்குள்ள குழந்தை ராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த வயது முதிர்ந்த ஆணும், பெண்ணும் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும், மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக ஆஸ்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர்கள் இறந்தனர்.

கூட்ட நெரிசல் காரணமாவே அவர்கள் இருவரும் இறந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனை போலீசார் மறுத்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர்கள் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News