திருப்பதி லட்டு கலப்பட நெய் வழக்கில் திருப்பம்.. உ.பி. நிறுவனத்தின் மோசடி அம்பலம்
- லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை ஆனது.
- ஏ.ஆர்.டெய்ரி என்ற பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் பெற்றது.
சமீபத்தில் ஆந்திராவின் திருப்பதி திருமலை கோவிலின் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை ஆனது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நெய்க்கு பதில் ரசாயனம் கலந்த பாமாயிலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த போலே பாபா நிறுவனம் வழங்கியது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தில் போலே பாபா டெய்ரி நிறுவனம் பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளதால் நேரடியாக ஒப்பந்தம் பெற முடியாமல் ஏ.ஆர்.டெய்ரி என்ற பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் பெற்று விநியோகித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான குற்றச்சாட்டில் சிபிஐ தொடர்புடையவர்களைக் கைது செய்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு ஜாமின் வழங்க சிபிஐ நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.