இந்தியா

கர்நாடகாவில் சோகம்: விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் லாரி புகுந்து 8 பேர் பலி

Published On 2025-09-13 03:52 IST   |   Update On 2025-09-13 03:52:00 IST
  • நேற்று இரவு லாரி ஒன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்தது.
  • இந்த கோர விபத்தில் 25-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

பெங்களூரு:

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று இரவு லாரி ஒன்று விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்தது.

ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர்மீடியனில் பாய்ந்து, விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்ற மக்கள் மீது வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். 25-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

தகவலறிந்து விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி சித்தராமையா, மத்திய மந்திரி எச்.டி.குமாரசாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

விபத்து தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News