இந்தியா

கிணற்றில் பாய்ந்த டிராக்டர்.. வயல் வேலைக்கு சென்ற 7 பெண்கள் நீரில் மூழ்கி பலி

Published On 2025-04-04 21:54 IST   |   Update On 2025-04-04 21:54:00 IST
  • மஞ்சள் அறுவடை செய்ய வயலுக்கு செல்லும் வழியில் டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் 7 பெண் விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • மேலும் 3 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மகாராஷ்டிராவில் மஞ்சள் அறுவடை செய்ய வயலுக்கு செல்லும் வழியில் டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் 7 பெண் விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

நான்டெட் மாவட்டம் அலேகான் கிராமத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பெண்கள் சென்றுகொண்டுந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, தண்ணீர் நிரம்பிய கிணற்றில் விழுந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், கிணற்றிலிருந்த அதிக அளவு தண்ணீரை வெளியேற்றினர்.

அதனபின் ஏழு பெண்களின் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. மேலும் 3 பெண்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இறந்த அனைவரும் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள வாஸ்மத் தாலுகாவின் கீழ் உள்ள குஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News