இந்தியா

பிரதமர் மோடி       சத்குரு

மண்ணைக் காப்போம் இயக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு

Published On 2022-06-05 02:03 IST   |   Update On 2022-06-05 02:27:00 IST
  • மண் வளத்தை மீட்டெடுக்க 100 நாட்களில் 30,000 கி.மீ தூரம் சத்குரு மோட்டார் சைக்கிளில் பயணம்
  • பயணத்தின் நிறைவு பகுதியாக, ஜூன் 21-ம் தேதி சத்குரு, தமிழகம் வருகிறார்

புதுடெல்லி:

மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி மண்ணைக் காப்போம் இயக்கம் என்ற உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தை மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தொடங்கிய சத்குரு, மோட்டார் சைக்கிளில், 27நாடுகளில் 100நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சென்ற நாடுகளில் எல்லாம் மதம், இனம், மொழி, கலாச்சாரம் போன்ற வேறுபாடுகள் கடந்து மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தனர்.

இந்த 100 நாள் பயணத்தில் இன்று 75-வது நாள் ஆகும். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், இன்று காலை நடைபெறும் மண்ணைக் காப்போம் இயக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது, இந்தியாவில் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடு மற்றும் அக்கறையின் பிரதிபலிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மண்ணைக் காப்போம் இயக்க பயணத்தின் நிறைவு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் வழியாக ஜூன் 21-ம் தேதி சத்குரு, தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News