இந்தியா

திருப்பதி கோவிலுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலான வீட்டை தானமாக வழங்கிய தமிழக பெண் பக்தர்

Published On 2022-12-27 08:39 IST   |   Update On 2022-12-27 08:39:00 IST
  • திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நர்சு என்.கே.நேமாவதி.
  • 2 தளங்களை கொண்ட புதிய மாடி வீட்டை கட்டினார்.

திருமலை :

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நர்சு என்.கே.நேமாவதி. இவர் சமீபத்தில் சொந்தமாக 2 தளங்களை கொண்ட புதிய மாடி வீட்டை கட்டினார். அந்த வீட்டின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். அவர் தனது பெற்றோரின் நினைவாக அந்த வீட்டை நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் காணிக்கையாக வழங்கினார்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்துக்கு வந்த பக்தர் என்.கே.நேமாவதி தேவஸ்தான சொத்துப் பாதுகாப்புத்துறை சிறப்பு அதிகாரி மல்லிகார்ஜுனாவிடம் தன்னுடைய ரூ.70 லட்சம் மதிப்பிலான புதிய 2 அடுக்கு மாடி வீட்டுக்கான ஆவணங்கள் மற்றும் சாவிகளை ஒப்படைத்தார்.

Similar News