இந்தியா

திருப்பதியில் ஆலங்கட்டி மழையால் பக்தர்கள் மகிழ்ச்சி

Published On 2023-04-22 10:28 GMT   |   Update On 2023-04-22 10:28 GMT
  • கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி விடுதி அறைக்கு சென்றனர்.
  • ஆலங்கட்டி மழையால் திருப்பதி மலையில் ஜில்லென காற்று வீசுகிறது. அங்கு கோடைக்கு இதமாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

திருமலை:

திருப்பதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. திருமலையில் திடீரென் ஆலங்கட்டி மழை பெய்தது.

கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த பக்தர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி விடுதி அறைக்கு சென்றனர்.

மழைக்காக மண்டபங்களில் ஒதுங்கியிருந்த பக்தர்கள் ஆலங்கட்டி மழையை சேகரித்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகளும் ஐஸ் கட்டிபோல் குண்டு தரையில் கிடந்த ஆலங்கட்டி மழையை சேகரித்து விளையாடினர்.

திருமலையில் தேவஸ்தான அதிகாரிகள், வியாபாரிகள், உள்ளூர் மக்கள், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆலங்கட்டி மழையால் திருப்பதி மலையில் ஜில்லென காற்று வீசுகிறது. அங்கு கோடைக்கு இதமாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

ஏழுமலையான் கோவிலில் நேற்று 57,354 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24,398 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. தரிசன டிக்கெட் பெறாத பக்தர்கள் 10 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News