இந்தியா

6 பேர் உயிரிழந்த ரெயில் விபத்துக்கு இதுதான் காரணம்.. ரெயில்வே விளக்கம் - ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

Published On 2025-11-05 02:11 IST   |   Update On 2025-11-05 02:12:00 IST
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர்-கட்னி இடையிலான ரெயில் பாதை மிகவும் பரபரப்பான ரெயில் பாதை.
  • இந்த இரண்டு ரயில்களும் மோதிய கோர விபத்தில் பயணிகள் நிலைகுலைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர்-கட்னி இடையிலான ரெயில் பாதை மிகவும் பரபரப்பான ரெயில் பாதை.

இந்நிலையில், இந்த ரெயில் பாதையில் கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவாராவில் இருந்து பிலாஸ்பூருக்கு நேற்று பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, பயணிகள் ரெயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில்மீது வேகமாக மோதியது. இதில் பயணிகள் ரெயில் சரக்கு ரயிலின் பெட்டிகள் மீது ஏறி நின்றது.

இந்த இரண்டு ரயில்களும் மோதிய கோர விபத்தில் பயணிகள் நிலைகுலைந்தனர். இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பயணிகள் ரெயில் சிவப்பு சிக்கனலை பொருட்படுத்தாமல் மீறியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ரெயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.    

மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரெயில்வே துறை சார்பில் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News