இந்தியா

ஸ்ரீசைலம் கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி- கூண்டு வைத்து பிடித்த வனத்துறை அதிகாரிகள்

Published On 2023-08-19 05:35 GMT   |   Update On 2023-08-19 05:35 GMT
  • வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
  • திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதி ஆகும்.

மலையின் கீழ் இருந்து பல கிலோமீட்டர் சென்றால் தான் கோவிலை சென்றடைய முடியம். அங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

இதனால் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை மலைபாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோவில் அருகே உள்ள வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரடி ஒன்று சுற்றி திரிந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் இதுகுறித்து ஸ்ரீசைலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் கரடியை பிடிக்க கோவில் அருகே வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி ஒன்று சிக்கியது.

இதையடுத்து வனத்துறையினர் கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.

இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News