வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது
- தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
- நீலகிரி மற்றும் கோவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடகிழக்கு ஜார்கண்ட் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வலுவிழந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
இதன் தாக்கமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி மற்றும் கோவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.