இந்தியா
பணவீக்கத்தால் எகிறிய சமையல் எண்ணெய் விலை.. கலால் வரியை குறைத்து மத்திய அரசு ஆறுதல்!
- கடுகு எண்ணெய் விலை 25% அதிகரித்து லிட்டருக்கு ரூ.170 க்கும் அதிகமாக உள்ளது.
- பாமாயிலின் சராசரி சில்லறை விலை லிட்டருக்கு 34% உயர்ந்தது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% முதல் 34% வரை உயர்ந்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட, மே 28 அன்று பாமாயிலின் சராசரி சில்லறை விலை லிட்டருக்கு 34% உயர்ந்து ரூ.134 ஆக இருந்தது. அதே நேரத்தில் சூரியகாந்தி எண்ணெய் விலை 30% அதிகமாக இருந்தது.
சோயா எண்ணெய் உள்நாட்டு சந்தையில் 18% உயர்ந்து லிட்டருக்கு ரூ.147க்கு விற்கப்பட்டது. கடுகு எண்ணெய் விலை சராசரியாக 25% அதிகரித்து லிட்டருக்கு ரூ.170 க்கும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோயா பீன்ஸ் ஆயில் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையை சரிகட்ட இறக்குமதிக்கான கலால் வரியை 10% குறைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று முதல் இந்த வரிக்குறைப்பு அமலுக்கு வந்தது.