இந்தியா

சுட்டுக் கொல்லப்பட்ட கேங்ஸ்டர் ஆதிக் அகமது, அஷ்ரப் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்

Published On 2023-04-17 03:42 IST   |   Update On 2023-04-17 03:42:00 IST
  • போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மகன் ஆசாத்தின் உடலை நேற்று முன்தினம் அங்குதான் அடக்கம் செய்தனர்.
  • அடக்கம் செய்வதகாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று முன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்ட ஆதிக் அகமது, அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகியோரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், உடல்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, பிரயாக்ராஜ் அருகே உள்ள கசாரி மசாரி சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஆம்புலன்சில் வயதான குடும்ப உறுப்பினர் ஒருவர் உடன் சென்றார். அந்த சுடுகாடு, ஆதிக் அகமதுவின் மூதாதையர் கிராமத்தில் உள்ளது. அவரது பெற்றோரை அங்குதான் அடக்கம் செய்துள்ளனர். போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மகன் ஆசாத்தின் உடலை நேற்று முன்தினம் அங்குதான் அடக்கம் செய்தனர்.

அதே சுடுகாட்டில், ஆதிக் அகமது, அஷ்ரப் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தூரத்து உறவினர்கள் சிலரும், உள்ளூர் மக்களும் மட்டும் மயானத்துக்குள் காணப்பட்டனர்.




Tags:    

Similar News