இந்தியா

விடைத்தாளை முகத்தின் மீது வீசிய ஆசிரியை.. 10 ஆம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை

Published On 2025-07-29 01:06 IST   |   Update On 2025-07-29 01:06:00 IST
  • உயிரியல் ஆசிரியை பினா தாஸ், திரிஷாவின் விடைத் தாளை அவரது முகத்தில் விட்டெறிந்துள்ளார்.
  • தனது மகளின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்யக்கூட பணம் இல்லாத நிலையில் இருந்துள்ளார்.

திரிபுராவில் உள்ள சோனாபூர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி திரிஷா மஜும்தார் (15).

6 ஆம் வகுப்பு முதல் திரிஷா வகுப்பின் முதல் ரேங்க் வாங்கும் மாணவியாக இருந்து வந்துள்ளார். ஆனால் அண்மையில் நடந்த தேர்வில் அவர் சீட்டிங் செய்ததாக கூறி, ஜூலை 24 ஆம் தேதி, உயிரியல் ஆசிரியை பினா தாஸ், திரிஷாவின் விடைத் தாளை அவரது முகத்தில் விட்டெறிந்துள்ளார்.

அனைவர் முன்னிலையிலும் இதை அவமானகமாக கருதிய திரிஷா மாலை வீடு திரும்பியதும் தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். ஒரு நாள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரிஷாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

திரிஷா ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை, ஒரு ஏழை விவசாயி, தனது மகளின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்யக்கூட பணம் இல்லாத நிலையில் இருந்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ சுதீப் ராய் பர்மன் மருத்துவமனைக்குச் சென்று துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.

Tags:    

Similar News