இந்தியா

டெல்லி மெட்ரோவில் பயணியின் கன்னத்தில் அறைந்த பெண்

Published On 2023-07-05 14:00 IST   |   Update On 2023-07-05 14:00:00 IST
  • மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்தது.
  • பெண் ஒருவர் தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த பயணியிடம் ஆவேசமாக சண்டையிடுவது போன்று காட்சி உள்ளது.

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளின் மோதல், ஆபாச சேட்டைகள், முத்த மழை பொழிந்த ஜோடி என கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகின. இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்தது.

இந்நிலையில் டெல்லி மெட்ரோவில் சக பயணியை பெண் ஒருவர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த பயணியிடம் ஆவேசமாக சண்டையிடுவது போன்று காட்சி உள்ளது. அப்போது கம்பார்ட்மென்டில் எல்லோர் முன்னிலையிலும் அந்த பெண் சக பயணியை கன்னத்தில் அறையும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ கர் கே காலேஷ் என்பவரது டுவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர், வாக்குவாதத்தை தடுக்க எதுவும் செய்யாமல் இருந்த மற்ற பயணிகளை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News