இந்தியா

தனது திருமணத்தில் மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக்காரர்

Published On 2023-03-31 11:04 IST   |   Update On 2023-03-31 11:04:00 IST
  • அயன்சென் என்ற புகைப்படக்காரர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
  • இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோக்கள் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

சமீப காலமாக திருமணங்களில் மணமக்களை வைத்து எடுக்கப்படும் வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் அயன்சென் என்ற புகைப்படக்காரர் பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட போது அவர் தனது கேமிராவில் மணமகளை சரியான வெளிச்சத்தில் எடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோக்கள் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News