இந்தியா
பாரில் மதுபாட்டில்களை வீசி சண்டை போட்ட குடிமகன்கள்
- குடிமகன்கள் 2 கோஷ்டிகளாக சண்டை போட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கார்டன்ஸ் கேலரியா மாலில் மது பார் ஒன்று உள்ளது. அங்கு குடிமகன்கள் 2 கோஷ்டிகளாக சண்டை போட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், மது போதையில் குடிமகன்கள் ஒருவரையொருவர் தள்ளுவது, தாக்குவது, அடித்து உதைப்பது போன்ற காட்சிகளும், மதுபாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி சண்டைபோடும் காட்சிகளும் உள்ளன.
பார் ஊழியர்கள் உள்பட பலரும் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றும் அந்த கோஷ்டியினர் அதனை கண்டுகொள்ளாமல் சண்டைபோடுவதை வீடியோவில் காண முடிகிறது.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.