இந்தியா

திருப்பதி கோவிலில் நவம்பர் மாத உற்சவ விவரங்கள் அறிவிப்பு

Published On 2023-10-30 10:02 IST   |   Update On 2023-10-30 11:12:00 IST
  • திருப்பதியில் நேற்று 85,497 பேர் தரிசனம் செய்தனர். 24 ,873 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
  • நேரடி இலவச தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இதில் நவம்பர் 9-ந்தேதி மாதாந்திர ஏகாதசி, 11-ந்தேதி சிவராத்திரி, 12-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம், 13-ந்தேதி வரலட்சுமி விரதம், 14-ந்தேதி திருமலை நம்பி சாற்றுமுறை, 16-ந்தேதி மணவாள மாமுனி சாற்றுமுறை, 17-ந்தேதி நாகர் சதுர்த்தி, பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா நடைபெற உள்ளது.

18-ந்தேதி வருடாந்திர புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம், 19-ந்தேதி ஏழுமலையான் கோவில் புஷ்பயாகம், 26-ந் தேதி கார்த்திகை மாத பவுர்ணமி, 27-ந்தேதி திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை, 28-ந்தேதி திருப்பானழ்வார் வருட திருநட்சத்திரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது என தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

திருப்பதியில் நேற்று 85,497 பேர் தரிசனம் செய்தனர். 24 ,873 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 2.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடி இலவச தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News