இந்தியா

காஷ்மீரில் ரோந்து பணியின்போது பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்து 3 வீரர்கள் பலி

Published On 2023-01-11 12:45 IST   |   Update On 2023-01-11 17:58:00 IST
  • ராணுவ வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
  • லையில் பனிபடர்ந்து இருந்ததால் வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து உள்ளது.

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மச்சால் செக்டரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு ராணுவ வாகனம் எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் தவறி விழுந்தது. ஆழமான பள்ளத்தில் விழுந்த வாகனத்தில் இருந்த 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டது. சாலையில் பனிபடர்ந்து இருந்ததால் வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து உள்ளது.

உயிரிழந்த 3 பேரும் இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக இந்திய ராணுவம் தரப்பில் கூறும்போது, மச்சால் செக்டர் பகுதியில் ரோந்து பணியின் போது 3 வீரர்கள் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து பலியாகி உள்ளனர். பனி மூட்டம் காரணமாக அவர்கள் தவறி பள்ளத் தாக்கில் விழுந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News