இந்தியா

தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் ராஜினாமா

Published On 2023-11-01 16:33 IST   |   Update On 2023-11-01 16:33:00 IST
  • தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 60 பேர் விருப்பம் தெரிவித்தனர்.
  • தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பின்வாங்கியது ஏன் என தேர்வு செய்த வேட்பாளர்கள் கேள்வி கேட்கின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் கசானி ஞானேஸ்வர். இவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 60 பேர் விருப்பம் தெரிவித்தனர்.

60 வேட்பாளர்களின் பட்டியலை தயாரித்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தேன்.

இது சம்பந்தமாக தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளர் லோகேஷ்க்கு 20 முதல் 30 தடவை போன் செய்தேன்.

ஆனால் அவர் போனை எடுத்து பதில் அளிக்கவில்லை. கட்சி வேட்பாளர்கள் தங்களது சொந்த பணத்தை செலவழித்து போட்டியிட ஆர்வம் காட்டினர்.

ஆனால் தெலுங்கானாவில் கட்சி போட்டியிட வில்லை என அறிவித்துள்ளனர். போட்டியிடாததற்கான உறுதியான காரணத்தை தலைமை எதையும் தெரிவிக்கவில்லை.

3 நாட்களுக்கு முன்பு சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். அப்போது தேர்தலில் போட்டியிடாததற்கு என்ன காரணம். என்னை ஏன் கட்சியில் சேர ஊக்கப்படுத்தினீர்கள்.

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை ஏன் எடுத்தீர்கள் என கேட்டேன் அதற்கு அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

லோகேஷிடம் கேட்டதற்கு அவர் ஒரு குழந்தையை போல் பதில் அளிக்கிறார். தெலுங்கானா அரசியல் குறித்து அவருக்கு எதுவும் தெரியவில்லை. தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பின்வாங்கியது ஏன் என தேர்வு செய்த வேட்பாளர்கள் கேள்வி கேட்கின்றனர்.

இதனால் விரக்தி அடைந்த நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News