இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவில் உலக விண்வெளி வார விழாவை தமிழக கவர்னர் தொடங்கி வைத்தார்

Published On 2022-10-05 06:48 GMT   |   Update On 2022-10-05 06:49 GMT
  • விண்வெளித்துறையில் இந்தியாவின் முன்னேற்றங்களை விளக்கும் அறிவியல் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உலக விண்வெளி வார விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நேற்று முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் உலக விண்வெளி வார விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சர்வதேச சமூகத்திற்கு கல்வி கற்பிக்க ஆண்டுதோறும் அக்டோபர் 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்ற இந்த விழாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ராஜராஜன் மற்றும் இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.

விண்வெளித்துறையில் இந்தியாவின் முன்னேற்றங்களை விளக்கும் அறிவியல் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

Similar News