இந்தியா

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கு- 3 வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2022-10-31 07:43 GMT   |   Update On 2022-10-31 07:43 GMT
  • வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  • மத்திய அரசு, மனுதாரர்கள் வாதங்களை சுருக்கமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

புதுடெல்லி:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 232 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்டம் சமத்துவ உரிமையை மீறுவதாகவும், மதத்தின் அடிப்படையில் சட்ட விரோதமாக புலம் பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமையை வழங்க முயற்சிப்பதாகவும் கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டோர் ரீட் மனுக்களை தாக்கல் செய்தன.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு, மனுதாரர்கள் வாதங்களை சுருக்கமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வாதங்களை தொகுத்து தாக்கல் செய்ய வக்கீல்கள் பல்லவி பிரதாப், கனு அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News