இந்தியா

பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்

Published On 2024-11-19 12:28 IST   |   Update On 2024-11-19 12:28:00 IST
  • பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
  • நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் வழங்குவது, இதுபோன்ற மற்ற வழக்குகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வாதிட்டது.

திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் சித்திக். இவர் பாலியல் பலாத்தகாரம் செய்ததாக நடிகை ஒருவர் புகார் செய்தார். அதன்பேரில் நடிகர் சித்திக் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கேட்டு தாக்கல் செய்த மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நடிகர் சித்திக் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், சித்திக்கிற்கு தற்காலிக ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் சித்திக் ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதிகள் பேலா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். நடிகர் சித்திக்கிற்கு ஜாமின் வழங்குவது, இதுபோன்ற மற்ற வழக்குகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வாதிட்டது. ஆனால் அந்த வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News