இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு

Published On 2022-08-27 09:51 IST   |   Update On 2022-08-27 09:51:00 IST
  • 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டார்.
  • 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8-ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்படுகிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்று ஓய்வு பெற்றதையடுத்து யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார்.

தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு காலை 10.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித் 1983-ம் ஆண்டில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.

நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டார். மேலும் இவர், 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News