இந்தியா

சீரடி கோவிலுக்கு ரூ.900 கோடி உண்டியல் வசூல்

Published On 2023-05-23 15:11 IST   |   Update On 2023-05-23 15:11:00 IST
  • புராண காலத்துக்கு முன்பு சீரடி கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.800 கோடியை தொட்டிருந்தது.
  • சீரடி ஆலயம் சார்பில் பல்வேறு வங்கிகளில் ரூ.2,500 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதனால் திருப்பதிக்கு இணையாக அந்த கோவிலிலும் உண்டியல் வசூல் அதிகரித்து வருகிறது. தினமும் 60 ஆயிரம் முதல் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் அந்த ஆலயத்துக்கு வந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. புராண காலத்துக்கு முன்பு சீரடி கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.800 கோடியை தொட்டிருந்தது.

இந்த நிலையில் 2022-23-ம் ஆண்டு தற்போது அது ரூ.900 கோடியை கடந்துள்ளது. அடுத்த ஆண்டு இது ஆயிரம் கோடியை தாண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். சீரடி ஆலயம் சார்பில் பல்வேறு வங்கிகளில் ரூ.2,500 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News