இந்தியா
null

திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதம் ரூ.120 கோடி காணிக்கை

Published On 2023-09-02 10:44 IST   |   Update On 2023-09-02 11:25:00 IST
  • பக்தர்களுக்கு 1 கோடியே 9 லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளன.
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 67,193 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தரிசனம், தலைமுடி மற்றும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை விவரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 22 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இவர்களில் 9.7 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோவில் உண்டியலில் ரூ.120 கோடியே 5 லட்சம் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

பக்தர்களுக்கு 1 கோடியே 9 லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 67,193 பேர் சாமி தரிசனம் செய்தனர். 28,750 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் .

ரூ.3.62 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. இன்று காலையில் நேரடி இலவச தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News