கேரளாவில் ஆலயத்திற்கு சென்ற 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் கைது
- குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகள் சிறுமி அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
- போலீசார் விசாரணை நடத்தியதில் பாதிரியார் ஷிமாயோன் ரம்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள கந்தநாடு மறைமாவட்ட ஆலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ஷிமாயோன் ரம்பன் (வயது 77).
இவர் பணியாற்றும் ஆலயத்திற்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரார்த்தனைக்கு வருவார். அந்த சிறுமியை பாதிரியார் ஷிமாயோன் ரம்பன் அடிக்கடி தகாத வார்த்தைகள் பேசியதாக தெரிகிறது.
மேலும் அந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இது பற்றி அந்த சிறுமி, குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகள் சிறுமி அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் பாதிரியார் ஷிமாயோன் ரம்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.