இந்தியா

மிலாடி நபி திருநாள்- பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2022-10-09 14:45 IST   |   Update On 2022-10-09 14:45:00 IST
  • முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
  • நமது சமூகத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வு மேலும் அதிகரிக்கட்டும்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று மிலாடி நபி திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "மிலாத்-உன்-நபி நல்வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் நமது சமூகத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வு மேலும் அதிகரிக்கட்டும். ஈத் முபாரக்" என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News