இந்தியா

பள்ளி வேனில் சிறுமி பலாத்காரம்- போபாலில் கைதான டிரைவர் வீடு இடிப்பு

Published On 2022-09-14 14:48 IST   |   Update On 2022-09-14 14:48:00 IST
  • ஷாபுரா மாவட்டம் வசந்த் குந்து காலனியில் தோட்டப்பகுதியில் பாலியல் வழக்கில் சிக்கிய வேன் டிரைவர் கிஷோர் குமார் சட்ட விரோதமாக வீடு கட்டி இருந்தார்.
  • கிஷோர் குமார் வீட்டினை அதிகாரிகள் இன்று இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றரை வயது மாணவி எல். கே.ஜி படித்து வருகிறார். சம்பவத்தன்று இந்த சிறுமி பள்ளி வேனில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது வேனில் வைத்து அந்த மாணவியை டிரைவர் கிஷோர்குமார் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பெண் உதவியாளர் கண் முன் இந்த சம்பவம் அரங்கேறியது.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கிஷோர்குமார் மற்றும் பெண் உதவியாளரை கைது செய்தனர்.

இந்த நிலையில் ஷாபுரா மாவட்டம் வசந்த் குந்து காலனியில் தோட்டப்பகுதியில் பாலியல் வழக்கில் சிக்கிய வேன் டிரைவர் கிஷோர் குமார் சட்ட விரோதமாக வீடு கட்டி இருந்தார். அந்த வீட்டினை அதிகாரிகள் இன்று இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

Tags:    

Similar News