இந்தியா

திருமணத்திற்காக இளம்பெண் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை: தாய் மீது போலீசில் புகார்

Published On 2023-12-08 10:58 IST   |   Update On 2023-12-08 10:58:00 IST
  • சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு என்னை கட்டாயப்படுத்துகிறார்.
  • பெண்ணின் 2 சகோதரிகளும் அரியானாவில் திருமணம் செய்துள்ளனர்.

கோரக்பூர்:

உத்தர பிரதேச மாநிலம் மகேஷ்ராவ் பகுதியை சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் சிலுவால் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், எனது தாய் அரியானாவை சேர்ந்த ஒருவருக்கு என்னை திருமணம் செய்து கொள்வதற்காக ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டார்.

அந்த வாலிபருடன் எனக்கு கடந்த நவம்பர் 23-ந் தேதி திருமணம் நடந்தது. தற்போது அந்த வாலிபர் என்னை தாக்கி கொடுமைப்படுத்துகிறார். மேலும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு என்னை கட்டாயப்படுத்துகிறார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

பெண்ணின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அந்த பெண்ணின் 2 சகோதரிகளும் அரியானாவில் திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண்ணின் புகாரை அவர்கள் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் அவஸ்தி, சிலுவால் போலீஸ் நிலைய அதிகாரி சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் கூறுகையில், ரூ. 4 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக பெண் கூறிய புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

அவரது தாயும், குடும்ப உறுப்பினர்களும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இருப்பினும் புகாரின் அனைத்து அம்சங்களையும், நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News