இந்தியா

இணையத்தில் பரவும் மாம்பழ 'ஆம்லெட்'

Published On 2023-05-17 12:51 IST   |   Update On 2023-05-17 12:51:00 IST
  • தெருவோர வியாபாரி ஒருவர் ஒரு எண்ணெய் சட்டியில் வறுத்த முட்டைகள் எடுக்கிறார்.
  • இரண்டு முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து மிளகாய் மற்றும் வெங்காயத்தை தவாயில் சேர்த்து பிசைய தொடங்குகிறார்.

உணவு பிரியர்களை மகிழ்விப்பதற்காகவே சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது உணவு வகைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் சில உணவுகள் அதிக வரவேற்பையும், சில உணவுகள் கடும் விமர்சனங்களையும் சந்திக்கும். அந்த வகையில் மாம்பழ ஆம்லெட் என்ற ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அதில் தெருவோர வியாபாரி ஒருவர் ஒரு எண்ணெய் சட்டியில் வறுத்த முட்டைகள் எடுக்கிறார். பின்னர் இரண்டு முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து மிளகாய் மற்றும் வெங்காயத்தை தவாயில் சேர்த்து பிசைய தொடங்குகிறார்.

அதன் பிறகு ஒரு பாட்டில் மாம்பழ ஜூசை சேர்த்து மாம்பழ ஆம்லெட் தயார் செய்கிறார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ ஏராளமானவர்களின் பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஏராளமானோர் இதுபோன்ற உணவு வகைகள் தயாரிக்கும் போது பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை கூறி உள்ளனர்.

Tags:    

Similar News