இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

Update: 2022-08-15 05:46 GMT
  • நில அதிர்வை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.
  • நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வரவில்லை.

சிம்லா:

இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் இன்று காலை 7.10 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நில அதிர்வை அந்த மாவட்ட மக்கள் உணர்ந்தனர். உடனடியாக வீடுகளில் இருந்து அவர்கள் வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வரவில்லை.

Tags:    

Similar News