இந்தியா

காஷ்மீரில் மின்திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு- 4 பேர் பலி

Published On 2022-10-30 11:12 IST   |   Update On 2022-10-30 11:12:00 IST
  • சுரங்கபாதையில் மின்திட்ட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர்.
  • துணை போலீஸ் கமிஷனர் தேவின்ஷ் யாதவ் ஆகியோர் 4 பேர் பலியானதை உறுதிபடுத்தினர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வாரில் மின் திட்ட சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கபாதையில் மின்திட்ட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியானது தெரிய வந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய மந்திரி ஜிதேந்திர சர்மா, கிஷ்த்துவார் துணை போலீஸ் கமிஷனர் தேவின்ஷ் யாதவ் ஆகியோர் 4 பேர் பலியானதை உறுதிபடுத்தினர்.

Similar News