இந்தியா

ஆந்திராவிடம் 60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, மிளகாய் வாங்கும் கேரளா

Published On 2022-10-19 10:08 IST   |   Update On 2022-10-19 10:08:00 IST
  • ஜெயா ரக அரிசியும், 550 டன் காய்ந்த மிளகாயும் தேவைப்படுவதாக கேரள பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
  • ஜெயா ரக அரிசி வழங்குவது தொடர்பாக ஆந்திர அரசுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என கேரள அமைச்சர் அனில் கூறியுள்ளார்.

திருப்பதி:

ஆந்திராவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் உயர் ரக அரிசியை கேரளா வாங்குகிறது. அத்துடன் பருப்பு, உளுத்தம் பருப்பு, தினை, சிவப்பு மிளகாய் போன்றவற்றையும் வாங்குகிறது.

மாதத்திற்கு 550 டன் மிளகாய் தேவைப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. ஜி.ஆர்.அனில் தலைமையிலான கேரளாவைச் சேர்ந்த தூதுக்குழு, கேரள நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஜெயா ரக அரிசி மற்றும் சிவப்பு மிளகாய் வழங்குவதற்காக ஆந்திர சிவில் சப்ளைஸ் துறை மற்றும் மார்க்ஃபெட் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

மாதந்தோறும் 4,500 டன் ஜெயா ரக அரிசியும், 550 டன் காய்ந்த மிளகாயும் தேவைப்படுவதாக கேரள பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் டிஸ்பென்சரி யூனிட் (எம்.டி.யு) மூலம் வீட்டுக்கு வீடு ரேசன் திட்டத்தை செயல்படுத்தியதற்கு கேரள பிரதிநிதிகள் அந்த அரசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கேரள மாநிலத்திற்கு வழங்கப்படும் ஜெயா ரக அரிசி விலை குறித்து அக்டோபர் 27-ந்தேதி விவாதித்து முடிவெடுப்போம்.

எல்லாம் சரியாக நடந்தால் ஜெயா ரக அரிசி வழங்குவது தொடர்பாக ஆந்திர அரசுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என கேரள அமைச்சர் அனில் கூறியுள்ளார்.

Similar News