இந்தியா

வரும் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி பெறும்- உலக பொருளாதார அமைப்பு தலைவர் தகவல்

Published On 2023-05-26 09:45 GMT   |   Update On 2023-05-26 10:29 GMT
  • உலகில் இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கி வருகிறது.
  • வரும் ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது டெல்லி:

ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக பொருளாதார அமைப்பின் தலைவர் போர்ஜ் பிடெண்டே இந்தியா வந்தார். அவர் இந்தியா தலைமை தாங்கி நடத்தும் ஜி 20 மாநாடு தொடர்பாக மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகில் இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கி வருகிறது. பேச்சு சுதந்திரம் கொண்ட சமூகமாக திகழ்கிறது. மற்ற வளரும் நாடுகளை காட்டிலும் இந்தியா ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ந்து வருகிறது. தற்போது ஜி 20 தலைவர் பதவியை வகிக்கும் இந்தியா உலகில் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது.

வரும் ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் வளர்ச்சி மூலம் சிறந்த முதலீட்டுக்கான சூழல் இந்தியாவில் நிலவுகிறது. இதனால் இந்தியாவில் தொழில் முதலீடுகள் அதிகரித்து அது வேலை வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும். வரும் ஆண்டுகளில் இது ஒரு அதிவேக வளர்ச்சியாக இருக்கும். வறுமைகள் ஒழிக்கப்பட்டு இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும். இம்மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதாரம் 2023-ம் ஆண்டு 5.8 சதவீதமாகவும்,2024-ல் 6.7. சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News