இந்தியா
கண் சிகிச்சை மையத்தில் தீ விபத்து: கணவன்-மனைவி மூச்சு திணறி பலி
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கண் சிகிச்சை மையம் உள்ளது.
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கண் சிகிச்சை மையம் உள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கண் சிகிச்சை மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது.
இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த மையத்தின் வளாகத்தில் தங்கி அங்கு பணியாற்றி வந்த நரேஷ் பார்சி மற்றும் அவரது மனைவி ஹன்சா ஆகியோர் இறந்து விட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது கடுமையான புகை எழுந்ததால் அதில் மூச்சு திணறி 2 பேரும் இறந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.