இந்தியா

அரியானாவில் 2 வாலிபர்கள் எரித்துக் கொலை- காருடன் தீ வைத்த கும்பல்?

Published On 2023-02-17 13:19 IST   |   Update On 2023-02-17 15:29:00 IST
  • வாலிபர்கள் சாவில் பசு காவலர்கள் என்று அழைக்கப்படுவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
  • ஜூனைத் மீது பசுக் கடத்தல் தொடர்பாக 5 வழக்கு இருப்பதாகவும் நசீர் மீது எந்த வழக்கும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சண்டிகர்:

அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. காருக்குள் 2 பேரின் உடல்கள் கருகி கிடந்தன. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் காருக்குள் பிணமாக கிடந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்த நசீர் (25), ஜூனைத் (35) என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருவரையும் நேற்று முன்தினம் ஒரு கும்பல் கடத்தி சென்று விட்டதாக அவர்களது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்திருந்தனர். இதையடுத்து அந்த வாலிபர்களை போலீசார் தேடி வந்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பிரேத பரிசோதனை மற்றும் டி.என்.ஏ. பகுப்பாய்வுக்கு பிறகு அவர்கள் யார் என்பது தெரிய வரும் என்றனர்.

இதற்கிடையே வாலிபர்கள் சாவில் பசு காவலர்கள் என்று அழைக்கப்படுவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூனைத் மீது பசுக் கடத்தல் தொடர்பாக 5 வழக்கு இருப்பதாகவும் நசீர் மீது எந்த வழக்கும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரில் மோனு மானேசர், பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்தவர்.

Tags:    

Similar News