இந்தியா

டெல்லியில் பட்டாசுக்கு 2023 ஜனவரி 1-ம் தேதி வரை தடை

Published On 2022-09-07 06:09 GMT   |   Update On 2022-09-07 09:30 GMT
  • அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை.
  • இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும்.

டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை தடை விதித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் இந்தாண்டும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் இந்த முறை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும், நேரடி விற்பனைக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு ஜனவரி 1, 2023 வரை அமலில் இருக்கும்.

தடையை கடுமையாக அமல்படுத்த டெல்லி போலீஸ், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும்.

டெல்லியில் கடந்த ஆண்டை போல் மாசு அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், இந்த முறையும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News