இந்தியா

கோப்பு படம்

மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது

Published On 2022-07-16 07:47 GMT   |   Update On 2022-07-16 07:47 GMT
  • ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின.
  • ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ரட்லம்:

மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் ரெயில் நிலையம் அருகே இன்று காலை உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. அந்த ரெயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின.

நல்லவேளையாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் அங்கு ரெயில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News