இந்தியா

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

Published On 2023-03-06 06:03 GMT   |   Update On 2023-03-06 08:20 GMT
  • ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.
  • திருப்பதியில் நேற்று 74,994 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருமலை:

திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 77 ஆயிரத்து 522 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 390 பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது.

அதில் ரூ.73.66 கோடி காணிக்கையாக கிடைத்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 14 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் நேற்று 74,994 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,799 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.59 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News