இந்தியா

2-வது மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்த கணவர்: விவாகரத்துக்கு ரூ.1 கோடி கேட்டதால் ஆத்திரம்

Published On 2023-05-18 10:38 IST   |   Update On 2023-05-18 10:38:00 IST
  • குப்தாவின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையினர் ரூ.10 லட்சம் கேட்டனர்.
  • குப்தாவின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையினர் ரூ.10 லட்சம் கேட்டனர்.

புதுடெல்லி:

டெல்லி, ரஜோரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குப்தா (வயது 71). இவரது மகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குப்தா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த பின்பு அந்த பெண் குப்தாவின் மகனை கவனிக்க மறுத்தார். மேலும் குடும்பத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தினார். இதனால் குப்தா மனம் உடைந்தார். அவர் 2-வது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

இதற்காக 2-வது மனைவியிடம் பேச்சு நடத்திய போது அவர் குப்தாவுக்கு விவாகரத்து கொடுக்க தனக்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றார். இதனை கேட்ட குப்தா ஆத்திரம் அடைந்தார்.

இதையடுத்து குப்தா மனைவியை கொலை செய்து விட முடிவு செய்தார். இதற்காக கூலிப்படையை அமர்த்த ஏற்பாடு செய்தார். அதன்படி டெல்லியை சேர்ந்த விபின், ஹிமாண்டி ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்கள் குப்தாவின் மனைவியை கொலை செய்ய ரூ.10 லட்சம் கேட்டனர். அவர்களுக்கு முன்பணமாக ரூ. 2.40 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படையினர், குப்தாவின் 2- வது மனைவியை கொலை செய்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குப்தாவை கைது செய்தனர். அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினர் விபின், ஹிமாண்டி ஆகியோரும் பிடிப்பட்டனர். அவரகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News